சீநோர் நிறுவனத்திற்கு 2 இலட்சத்து 34 ஆயிரம் டொலர் பெறுமதியான ஏற்றுமதி வெற்றி கிடைத்துள்ளது.
மொரிஷியஸ் நாட்டிற்காகத் தயாரிக்கப்பட்ட “CAPTAIN C” படகை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்
கடந்த காலங்களில் நட்டத்தில் இயங்கியதால் மூடப்பட வேண்டிய அல்லது தனியார்மயப்படுத்தப்பட வேண்டிய நிலையில் இருந்த அரசுக்குச் சொந்தமான சீநோர் நிறுவனம், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தப்பட்டுஇதன் ஒரு முக்கிய மைல்கல்லாக, மொரிஷியஸ் நாட்டின் தனியார் துறைக்காகத் தயாரிக்கப்பட்ட 55 அடி நீளமான பாரிய மீன்பிடிக் படக கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் நேற்று (04/08) மட்டக்குளி சீநோர் கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்றது.
“CAPTAIN C” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நவீன படகின் பெறுமதி 234,000 அமெரிக்க டொலர்களாகும். இது 29 கன மீட்டர் மீன் சேமிப்புத் கொள்ளளவையும், 12,500 லீட்டர் எரிபொருள் கொள்ளளவையும் கொண்டது. மொரிஷியஸ் நாட்டின் ‘Captain C Adventure Offshore Fishing Co-operative Society’ நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் சுட்டூ அவர்களிடம் இந்தப் படகு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
வடக்கின் சுற்றுலாத் துறையை இலக்காகக் கொண்டு 150 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய படகொன்றைத் தயாரிக்கும் பொறுப்பையும் அமைச்சர் இதன்போது சீநோர் நிறுவனத்திடம் ஒப்படைத்தார்.
இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல்மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச, தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையத்தின் (NARA) தலைவர் பேராசிரியர் சனத் ஹெட்டியாரச்சி, இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் முகமது நவ்ராஸ் நாசர் உள்ளிட்ட அமைச்சின் மற்றும் இணைந்த நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.