மைத்திரிபால சிறிசேன மறவன்புலவு சச்சிதானந்தனை சந்தித்தார்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்.மாவட்டத்திற்கு மூன்று நாள் விஜயமாக உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது விஜயத்தின் இறுதிநாளான நேற்று (ஜூலை 3) ஞாயிற்றுக்கிழமை மாலை தென்மராட்சி மறவன்புலவில் அமைந்துள்ள இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவரும், சைவத்தமிழ் அறிஞருமான மறவன்புலவு சச்சிதானந்தனின் இல்லத்திற்குத் திடீர் விஜயம் செய்து மரியாதை நிமிர்த்தமாக அவரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

தனது யாழ்.மாவட்டத்திற்கான மூன்றுநாள் விஜயத்தை நிறைவு செய்து மீண்டும் கொழும்பு செல்லும் வழியிலேயே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சுமார் அரை மணித்தியாலங்கள் வரை சச்சிதானந்தனின் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி தங்கி நின்று வீட்டு நூல்நிலையத்தை ஆர்வத்துடன் பார்வையிட்டதுடன் சமகால அரசியல் நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.

Share this Article