முல்லைத்தீவு மாவட்ட செயலக 2023 ஆம் ஆண்டுக்கான வாணி விழா நிகழ்வுகள் மாவட்ட செயலக ஊழியர் நலன்புரிக்கழகத்தின் ஏற்பாட்டில் இன்று(ஒக்ரோபர் 24)காலை 09.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
கடந்த 15 ஆம் திகதி காலை நவதானிய பூரண கும்பம் வைத்தலுடன் பக்தி பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட நவராத்திரி நிகழ்வு இன்று கும்பசரித்தலுடன் நிறைவு பெற்றது.
பூஜை வழிபாடுகளை குமுழமுனை ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய பிரதம குருக்கள் ஸ்ரீல ஸ்ரீ சம்பந்தன் குருக்கள் நிகழ்த்தினார். இதன்போது அலுவலக உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு ஏடு தொடக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
பூசை நிகழ்வுகளைத் தொடர்ந்து மாவட்ட செயலக பிரதம கணக்காளரின் சிறப்புரை, உத்தியோகத்தர்களின் நடனம், சிறுவர்களின் நடனம், பாடல்கள், கவிதை போன்ற கலை நிகழ்வுகள் நடைபெற்றன.
இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு அ. உமாமகேஸ்வரன் , மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்) திரு. க. கனகேஸ்வரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) திரு. எஸ்.குணபாலன், மாவட்ட பிரதம கணக்காளர் திரு.ம.செல்வரட்னம், மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி க.ஜெயபவானி, மாவட்ட உள்ளக கணக்காய்வாளர் திரு. லிங்கேஸ்வரன், பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் எனப் பலரும் பக்தி பூர்வமாகக் கலந்து கொண்டிருந்தனர்.