முல்லைத்தீவு மாவட்ட சனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் (ஜூலை18) புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி விழாமண்டபத்தில் காலை 9.00 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர்அ.உமாமகேஸ்வரன் தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் கிராமிய பொருளாதாரஇராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் பிரதம அதிதியாக கலந்துகொண்டார் . இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம்அடைக்கலநாதன் , வடமாகாண ஆளுனரின் செயலாளர் நந்தகோபன்,மேலதிகஅரசாங்க அதிபர் சி.குணபாலன் , மாவட்ட சமூர்த்திப் பணிப்பாளர்ஜனாப்.முபாரக், ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச்செயலாளர் திருமதிசாரதாஞ்சலி, வடக்குமாகாண பதில் கல்விப்பணிப்பாளர் பிரட்லி , பிரதேசசெயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள்ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்
.
சனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் எண்ணக்கருவிற்கமைய கல்விநடவடிக்கைகளை மேற்கொண்டு செல்வதற்காக பொருளாதாரநெருக்கடிகளையுடைய ஆனாலும் கல்வி மற்றும் இணைப்பாடவிதானசெயற்பாடுகளில் விசேட திறமைகளை வெளிப்படுத்தும் நாடு முழுவதிலுமுள்ளஅனைத்து பாடசாலைகளையும் உள்ளடக்கும் வகையில் 100,000 மாணவமாணவிகளைத் தெரிவு செய்து மாதத்திற்கு ரூ.3000/- வீதம் 12 மாதங்களுக்குபுலமைப்பரிசில்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான நிகழ்ச்சித்திட்டம் மற்றும்தற்போது க.பொ.த.(உ.த.) கற்கும் 60 மாணவ மாணவிகள் வீதம் 100 கல்விவலயங்களிலிருந்து தெரிவுசெய்து அந்த 6000 மாணவர்களுக்கு மாதத்திற்குரூ.6000 வீதம் 24 மாத காலத்திற்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்சனாதிபதி நிதியத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்திற்கான சனாதிபதி கல்விப்புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு வலயம் மற்றும் துணுக்காய்வலயம் என இரு பிரிவுகளாக இடம்பெற்றது. முல்லைத்தீவு வலயத்தில் முதலாம்வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரை 412 மாணவர்களும் உயர்தர வகுப்புமாணவர்கள் 60 பேரிற்கும் அதேபோல். துணுக்காய் வலயத்தில் முதலாம் வகுப்புமுதல் பதினோராம் வகுப்பு வரை 390 மாணவர்களும் உயர்தர வகுப்புமாணவர்கள் 60 பேரிற்கும் மொத்தமாக 922 மாணவர்களிற்குஇப்புலமைப்பரிசில் திட்டத்திற்குரிய சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.