கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட அனைத்து முன்பள்ளிகளும் அடுத்த மாதம் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆகஸ்ட் முதலாம் திகதி முன்பள்ளிகளை மீண்டும் திறக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜூலை மாதத்தில், அனைத்து முன்பள்ளிகளையும், ஆகஸ்ட் 10 முதல் அனைத்து பள்ளிகளிலும் தரம் ஒன்று மற்றும் இரண்டாம் தர வகுப்புகளை மீண்டும் திறக்க கல்வி அமைச்சு அனுமதி வழங்கியிருந்தது.
இதேவேளை, அனைத்து முன் பள்ளிகளும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.