முன்னாள் பிரதேச சபை தலைவர் புலவர் ஏ.டபுள்யு அரியநாயகம் அவர்கள் இயற்கை ஏய்தினார்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் மகாவித்தியாலயத்தின் பிரதி அதிபர் கோட்டக்கல்வி அதிகாரி போன்ற பல்வேறு துறைகளின் ஊடாக நெடுந்தீவிற்கு பல்வேறு பணிகளை ஆற்றி வந்த புலவர் ஏ.டபுள்யு.அரியநாயகம் அவர்கள் இன்று காலை நோய்த்தாக்கம் காரணமாக இன்று காலை மரணமடைந்துள்ளார்

நெடுந்தீவின் புலமை சார்ந்தவர்களில் ஒருவரும் நெடுந்தீவின் மீது பற்றுக் கொண்டவருமான புலவர் அவர்கள் நெடுந்தீவில் கல்வித்துறை, சமூக அபிவருத்தி துறைகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு காரணமாக இருந்தவர் என்பதுடன் மிகுந்த இறை பக்தி கொண்டவர்

அண்மைக்காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் இன்று (ஆகஷ்ட் 12) யாழ் போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார் அன்னாரது இறுதி நிகழ்வுகள் நெடுந்தீவில் நடைபெறும்.

Share this Article