முன்னாள் படைத் தளபதிகள் மூவருக்கு தூதுவர் பதவிகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

முன்னாள் தளபதிகள் மூவருக்கு உயர்மட்ட இராஜதந்திர பதவிகளை வழங்க பாராளுமன்றத்தின் உயர் பதவிகள் குழுவினால் அங்கீகாரம் வழங்கப்பட் டுள்ளது.

வெளிநாடுகளுக்கான தூதுவர் பதவியே இவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. அதன்படி ஓய்வுபெற்ற படைத் தளபதிகளான ரவீந்திர சந்திரசிறி விஜேகுணரத்ன, தமித் நிஷாந்த சிறிசோம உலு கேதென்ன மற்றும் சுதர்சன் கர கொட பத்திரன ஆகியோருக்கே இந்த உயர் பதவி வழங் கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு முறையே, பாகிஸ்தானுக்கான புதிய தூதுவர், கியூபாவுக்கான புதிய தூதுவர் மற்றும் நேபாளத்துக்கான புதிய தூதுவர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

பல நாடுகளுக்கான இராஜ தந்திரிகளை இலங்கை அரசாங்கம் மாற்றிவருகின்ற பின்புலத்திலேயே இந்த மூன்று நியமனங்களும் வழங்கப்பட்டுள் ளன.

Share this Article