முகநூலில் பெண் போல நடித்து கொள்ளையிட்ட இருவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

பெண் போல பேசி ஏமாற்றி நபரொருவரிடம் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் இன்று(டிசம்பர் 30) நெல்லியடி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

யாழ்ப்பாணம் – நெல்லியடியைச் சேர்ந்த இருவரேஇவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

திருகோணமலையைச் சேர்ந்த ஒருவருக்கு நெல்லியடியைச் சேர்ந்த ஒருவர் பெண் போல பழகி காதல் வலையில் வீழ்த்தி நெல்லியடிக்கு வரவழைத்துள்ளநிலையில், இதனை நம்பி நெல்லியடிக்கு வந்த திருகோணமலை வாசியை அச்சுறுத்தி பணம் உடைமைகள் என்பன இருவரால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக திருகோணமலை வாசி காவல் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்ததன் பின்னர், விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர் இருவரை கைது செய்ததுடன் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட பணம் உடமைகளையும் மீட்டதாக தெரிய வருகிறது.

சந்தேக நபர்கள் இருவரிடம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Share this Article