சட்டவிரோத மீன்பிடி மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி, போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றைத் தடுக்க அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது பயன்பாட்டிலுள்ள 5,200 பல நாள் மீன்பிடிப் படகுகளில் 4,200 படகுகளுக்கு ஏற்கனவே கண்காணிப்பு முறைமை (VMS) பொருத்தப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள 1,500 பல நாள் மற்றும் ஒரு நாள் மீன்பிடிப் படகுகளுக்கும் இக்கண்காணிப்பு முறைமையை அமுல்படுத்துவதைத் தவறாது கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாக மாற்றவும், அதற்கான செலவை அரசாங்கம் ஏற்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.