வேலணை – துறையூர் மீன் சந்தையின் வரி அறவீடு குறித்த சர்ச்சையால் பிரதேசஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வேலணைப் பிரதேசத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (செப். 19) காலை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது பிரதேசத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொதுஅமைப்புக்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், துறைசார் அதிகாரிகள்விவாதித்தனர்.
இதன் ஒரு பகுதியாக துறையூர் மீன் சந்தையின் குத்தகை மற்றும் வரி அறவீடுகுறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து ஆராயப்பட்டது, குறித்தவிடயம் தொடர்பில் பிரதேச சபை வரி அறவீடு செய்ய வலியுறுத்தியதுடன் அதுதொடர்பிலான சபையின் சுற்றுநிரூபங்களையும் காண்பித்தனர்.

ஆனால் குறித்த சந்தை இறங்குதுறை என்றும் தாம் வரி அறவீட்டைஎதிர்ப்பதாகவும் தமது அறுவடை மீன்களை விற்க வரியோ, குத்தகையோ அறவிட அனுமதிக்க வேண்டாம் என்று அப்பகுதி தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.
இதனால் உறுபினர்களுக்கும் சந்தையின் சார்பான அமைப்பினருக்கும்இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில்சந்தை சார்பு சமூக மட்ட அமைப்பினர் பிரதேச சபை உறுப்பினர்கள் இருந்தஇடத்தை நோக்கி எழுந்து சென்றதால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பிரதேச செயலர் மற்றும் அதிகாரிகள் சென்று குறித்தஅமைப்புகளின் பிரதிநிதிகளை கட்டுப்படுத்தியமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இந்நிலையில் வேலணையின் தீரா பிரச்சினையாக உருவெடுத்துள்ள குறித்ததுறையூர் சந்தையின் வரி அறவீட்டுக்காக பிரதேச செயலர், பிரதேச சபைதவிசாளர் ஆகியோர் தலைமையில் கடற்றொழில் சமூக அமைப்புகளைஒன்றிணைத்து விசேட குழு ஒன்றை அமைத்து ஆராய்ந்து தீர்வை எட்டநடவடிக்கை எடுக்குமாறு ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஜெயச்சந்திரமூர்த்திரஜீவன் அறிவுறுத்தியதுடன் இப்பிரச்சனை முடிவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.