வங்காள விரிகுடாவில் காணப்படும் இரண்டு காற்றுச் சுழற்சிகளும் இன்று இரவுஒருங்கிணையும் வாய்ப்புள்ளது. இரண்டும் ஒருங்கிணைந்தால் இது ஒருகாற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெறும். அத்தோடு இது மேற்கு வடமேற்குதிசை நோக்கி வடக்கு மாகாணத்திற்கருகாக நகரும் வாய்ப்புள்ளது.
இதனால் இன்று முதல் எதிர்வரும் 15.11.2024 திகதி வரை வடக்கு மற்றும் கிழக்குமாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழைகிடைக்கும் வாய்ப்புள்ளது. அத்தோடு இந்த மழை இடி மின்னல் நிகழ்வுடன்இணைந்த மழையாக இருக்கும். எனவே இடி மின்னல் தொடர்பில் மிகவும்அவதானமாக இருப்பது அவசியம்.
அத்தோடு இன்று முதல் எதிர்வரும் 14.11.2024 வரை வடக்கு மற்றும் கிழக்குமாகாணங்களின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது என புவியியற் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா இன்றைய வானிலை தகவலில் குறிப்பிட்டுள்ளார்.