நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்த நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான சமுத்திரதேவா படகு கடந்த சில நாட்களாக பழுதடைந்த நிலையில் திருத்த வேலைக்காக நயினாதீவில் தரித்து திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டது.
இன்றைய தினம் ஒக்டோபர் 17 திருத்த வேலைகள் யாவும் நிறைவு பெற்று மீண்டும் மக்கள் சேவைக்காக கடற்போக்குவரத்தில் இணைந்து கொண்டது சுமார் ஐந்து இலட்சம் ருபாய் செலவில் மிக சிறப்பான முறையில் திருத்த் வேலைகள் மேற்கொள்ளப்பட்முள்ளதாக பல நோக்கு கூட்டுறவுச் சங்க தலைவர் திரு.எ.அருந்தவசீலன் அவர்கள் அவர்கள் தெரிவித்தார்
கடற்போக்குவரத்து என்பது நெடுந்தீவு மக்களுக்கு பல்வேறு இடையூறுகளாக காணப்படுகின்றது ஆயினும் சமுத்திரதேவா படகு நெடுந்தீவுக் கடலுக்கு ஏற்றவித்தத்தில் அமைக்கப்பட்டுள்ளதுடன் ஒரு நேரத்தில் அதிக பொருட்கள் மற்றும் பயனிகளை எற்றக்கூடிய முறையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.