நெடுந்தீவினை சேர்ந்த தற்போது லண்டனில் வசித்து வரும் திரு.யோன்சன் அவர்களால், நெடுந்தீவின் சில முக்கிய இடங்களில் மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் நெடுந்தீவு மேற்கு நாச்சிமார் கோவில் சந்தி, மேற்கு அந்தோனியார் கெவி சந்தி, மேற்கு பல நோக்கு கூடடுறவுச் சந்தி, நெநெழுவினி கோவில் சந்தி, மத்தி சந்தியம்மார் கோவில் சந்தி மற்றும் நெடுந்தீவு கிழக்கு காட்டுராமன் சல்லி சேமக்காலை சந்தி ஆகிய இடங்களில் இவ் மின் விளக்குகள் பூட்டப்டுகின்றது.
மின்சார சபை மற்றும் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் இச் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
திரு.யோன்சன் அவர்கள் நெடுந்தீவின் மீது மிகுந்த பற்றுள்ளவர் கடந்த காலங்களிலும் பல்வேறு செயற்பாடுகளை நேரடியாகவும் அமைப்புக்கள் ஊடாகவும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
வீதிகள் பழுதடைந்த நிலையில் காணப்படுவதுடன, மின் விளக்குகள் என்பது மிக நெடுந்தீவில் மிக முக்கிய தேவையாக காணப்படுவதுடன் மேலதிக மின்விளக்குகள் தேவையும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் பிரதேசசபை, நெடுந்தீவு சர்வதேச அமையம், மற்றும் சில தனிநபர்களது பங்களிப்புடன் பல இடங்களில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.