மிகக்குறைந்த வருமானத்தை கொண்ட நாடானது இலங்கை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

தெற்காசியப் பிராந்தியத் தின் மொத்த உள்நாட்டு உற்பத் தியுடன் ஒப்பிடும் போது மிகக் குறைந்த வருமானத்தைக் கொண்ட நாடாக இலங்கை காணப்படுவதாக வெரிடே ரிசேர்ச் என்ற நிறுவனம் முன்னெடுத்துள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 17 வருடங்களில் இலங்கை தமது வருமான இலக் குகளை அடையத்தவறியுள்ள தாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தில் வருவாயை அதிகரிப்பதற்கான உடன்பாட்டை யும் இலங்கை உள்ளடக்கியுள்ளது.

எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தின் வருமான இலக்குகள் தொடர்பான 12 நிகழ்ச்சி திட்டங்களில் 3 திட் டங்களை மட்டுமே இலங்கை எட்டியுள்ளதாக வெரிடே ஆய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்க வருவாயை ஈட்டு வதில் வரி வருவாய் கணிசமான பங்கை வகிக்கிறது எனவும் இந்த ஆண்டு வரி வருவாய் மூவாயிரத்து 130 பில்லியன் ரூபாவாக இருக்கும் எனவும் அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த வருட இறுதிக்குள் இலங்கை அரசாங் கத்தின் கணிப்பை விட குறைந்த வருமானத்தை அதாவது 2 ஆயி ரத்து 940 பில்லியன் ரூபா வரி வருவாயைப் பெறும் என சர்வ தேச நாணய நிதியம் மதிப்பீடு களை மேற்கொண்டுள்ளது.

எனினும், வருடத்தின் முதல் காலாண்டில் 578 பில்லியன் ரூபாய் மாத்திரமே உண்மை யான வரி வருவாயாக வசூலிக் கப்பட்டுள்ளதாகவும், இதன்படி வருட இறுதிக்குள் 2 ஆயிரத்து 762 பில்லியன் ரூபாவை மட் டுமே ஈட்டமுடியும் எனவும் வெரிடே ஆய்வு நிறுவனம் சுட் டிக்காட்டியுள்ளது.

Share this Article