பருத்தித்துறையைச் சேர்ந்த பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (ஒக்ரோபர் 3) காலை 7.15 மணியளவில் பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு முன்பாக வைத்து சிலரால் ஆசிரியர் தாக்கப்பட்டுள்ளார்.
குறித்த பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவி ஒருவர் குறைவான வருகையுடன் காணப்பட்ட நிலையில் அதுதொடர்பில் கண்டித்துள்ளதை அடுத்து, மாணவியின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட தரப்பினரால் குறித்த ஆசிரியர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கைது நடவடிக்கையின் பின்னர் மாணவியின் தரப்பிலிருந்து குறித்த ஆசிரியர் மாணவி மீது முறைகேடான நடத்தைகளை வெளிப்படுத்தினார் என்று பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.