பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

2022-2023 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை அனுப்ப வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை மறுதினம்(ஒக்ரோபர் 6) முடிவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் தமது விண்ணப்பங்களை இணையத்தளத்தில் அனுப்பி வைக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

Share this Article