மாணவர்கள் மீதான அடக்குமுறைகளை நிறுத்தக்கோரி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்திற்கு அழைப்பு.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

விசாரணை என்னும் பெயரில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்கு கண்டனம் தெரிவிக்கும் முகமாக ஜனநாயக உரிமையை  கோரி  இன்று (19/03) வியாழக்கிழமை விரிவுரைகளை புறக்கணித்தல் மற்றும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக கலைப்பீடம் மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது

கடந்த பெப்ரவரி மாதம் 4ம் திகதி கறுப்பு கொடி ஏற்றிய விவகாரம் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக மூன்று மாணவர்கள் குற்ற தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக அழைத்தமையை கண்டித்து மாணவர்கள் விரிவுரைகளை புறக்கணித்து யாழ் பல்கலைக்கழக முன்றலில் இன்று காலை 10 மணிக்கு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளார்கள் .

எனவே அனைத்து மாணவர்களையும் மற்றும் அனைத்து தரப்புகளையும் மாணவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு வலுசேர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Share this Article