தேசிய மொழிகள் பிரிவின் வடக்கு மாகாண நிலையத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களிடையே மொழிக் கல்வியை வளர்ப்பதற்கான பயிற்சிப் பட்டறை இன்று(டிசம்பர் 4) கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் 150 மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது மொழிக் கல்விக்கான அணுகல், மொழி உரிமை, பாடசாலை மொழி வட்டம் உருவாக்கம், மொழிக்கான அரச நிறுவனங்கள், 1956 – அழைப்பு மையம், மொழி உரிமை மீறப்பட்டால் அதற்கான பரிகாரங்கள், தேசிய மற்றும் சர்வதேச மொழிக்கான கேள்விகள், ஆளுமை மற்றும் மொழி மேம்பாடு போன்ற விடயங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.