மாங்குளத்தில் அண்மையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்துவைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றிஉயிரிழந்தார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 48 வயதான கந்தசாமி கருணாகரன் என்பவரேஉயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றிஇன்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்தார்.
தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கத்துக்கான செயலகத்தின் (ONUR)பணிப்பாளர்சபை பிரதிநிதியாக கந்தசாமி கருணாகரன் செயற்பட்டு வந்தமைகுறிப்பிடத்தக்கது.
கடந்த 25ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்தபேருந்து திருத்த வேலை காரணமாக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தநிலையில், பேருந்தின் மீது கனரக வாகனம் மோதி விபத்துக்கு உள்ளானது.
விபத்தில் சம்பவ இடத்திலையே மூவர் உயிரிழந்த நிலையில் இருவர்படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில் ஒருவரே இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.