மல்லாகம் சனசமூக நிலையத்துக்கு அருகில் ஆர்.பி.ஜி மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மல்லாகம் பகுதியிலுள்ள சனசமூக நிலையம் ஒன்றுக்கு அருகாமையில் இருந்து ஆர்.பி.ஜி ஷெல் ஒன்று இன்று(ஏப்ரல் 18) மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் ஷெல் இருப்பது நேற்றையதினம் அவதானிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தெல்லிப்பழை பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

அதன்பின்னர் நீதிமன்ற நடவடிக்கையின் பின்னர் இன்றையதினம் அவ்விடத்திடத்திற்கு வந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அந்த ஷெல்லை மீட்டுச் சென்றுள்ளனர்.

Share this Article