மல்லாகத்தில் நாளை உச்சம் கொடுக்கவுள்ள சூரியன்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மல்லாகம் பிரதேசத்திற்கு நாளை(ஓகஸ்ட் 28) மதியம் 12.11 மணியளவில் சூரியன் நேராக உச்சம் கொடுக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சூரியனின் தெற்கு நோக்கிய ஒப்பீட்டு இயக்கத்தில், நாளை முதல் செப்டம்பர் 07 வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலே செல்லப் போகின்றது.

நாளை மதியம் 12.11 மணியளவில் கோவிலான் புள்ளி மற்றும் மல்லாகம் (யாழ்ப்பாணம் மாவட்டம்) ஆகிய பிரதேசங்களிற்கு நேராக சூரியன் தலைக்கு மேல் உச்சம் கொடுக்கவுள்ளது.

எனவே மக்கள் அனைவரும் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.

Share this Article