மறைந்த தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா அவர்களின் புகழுடல், அரசடி வீதி, மாவிட்டபுரம், தெல்லிப்பழையிலுள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காகவைக்கப்பட்டு, இறுதிக் கிரியைகள் இன்று (பெப். 02) காலை இடம்பெற்று பகல் 2.00 மணியளவில் மாவிட்டபுரம் தச்சன்காடு இந்து மயானத்தில் தீயுடன் சங்கமமாகியது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாஅவர்களின் புகழுடலுக்கு இன்றையதினம் முன்னாள் , இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , பொது அமைப்பின் பிரதிநிதிகள் , கட்சி தொண்டர்கள், உறவினர்கள் , நண்பர்கள் என பலரும் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் வந்து அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
அஞ்சலி நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பலர் ஒவ்வொரு துறைசார்ந்தும் அஞ்சலி உரையினை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து புகழுடல் பூம்பாடையில் ஏற்றப்பட்டு தொண்டர்களால் இந்து மயானம் வரைக்கும் சுமந்து செல்லப்பட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.