மருத்துவ உபகரணங்கள் கொள்வனவிற்கு சம்பளத்தை நன்கொடையளிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியினர்
நாட்டில் அதிகரித்துவரும் கொரோனாத் தொற்றிலிருந்து நாட்டின் பொருளாதாரத்தையும், மக்களையும் பாதுகாப்பதற்கு அரசு திணறி வருகின்றது.
இந்நிலையில் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக தமது கட்சிக்குள் நிதியம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இந்நிதியத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது மாத சம்பளத்தின் நிதியை நன்கொடையாக வழங்கவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸஅத்தநாயக்கா தெரிவித்துள்ளார்.
இந்நிதிமூலம் மருத்துவ உபகரணங்கள் கொள்வனவு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.