ஜ.எப்.ஆர்.சி அனுசரணையுடன் இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் இணைந்து இலவச மருத்துவ முகாம் நேற்று (மாா்ச் 06) நெடுந்தீவு வைத்தியசாலையில் திறம்பட நடாத்தப்படடது.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நெடுந்தீவு பிாிவின் தலைவா் மதிப்பிற்குாிய திரு.அருந்த சீலன் அவா்கள் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலையில் மதிப்பிற்குாிய வைத்தியா் தீவின் மைந்தன் சிவபாத மூா்த்தி அவா்களின் தலமையிலான வைத்திய அணியினரால் சிறப்பான முறையில் கொவிட் 19 பாதுகாப்பு சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக இடம் பெற்றது.
இலவச மருத்துவ முகாமில் சிறுவா், பெண்கள் முதியோா்கள் என பலரும் கலந்து கொண்டு பயனடைந்தனா். .
இவ் மருத்துவ முகாமில் பங்கெடுத்த 21 பேருக்கு கண் பார்வை சம்பந்தமான அறுவை சிகிச்சை எதிர்வரும் 26.03.2021 யாழ் போதனா வைத்திய சாலையில் காலதாமதமின்றி இலவசமாக செய்வதற்கான ஏற்பாடுகளும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இவ் இலவச மருத்துவ முகாமை நெடுந்தீவு செஞ்சிலுவைச் சங்க தலைவர் திரு எட்வேட் அருந்த சீலன் குழுவினா் மிக சிறப்பான முறையில் ஒழுங்கமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நெடுந்தீவில் கடந்த காலங்களில் பல முறை இவ்வாறான மருத்துவ முகாம் உட்பட இரத்தான முகாம் போன்றவற்றினை நடாத்திவந்தமை குறிப்பிடத்தக்கது.
புரவிப் புயலின் பின்னா் ஐ.எவ்.ஆா்.சியின அனுசரணையுடன் பல்வேறு செயற்றிட்டங்கள் நெடுந்தீவிலும், யாழிலும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.