மருதனார் மடம் சந்தைக் கொத்தனியில் வங்கி ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளார்.
அனுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில் நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதில் ஒருவர் சுண்ணாகத்திலுள்ள வங்கி ஊழியர் ஒருவருக்கும் தொற்று எனத் தெரிவிக்கப்படுகின்றது இவர் மருதனார் மடம் சந்தை வியாபாரிகளிடம் பணம் வசூலிக்க செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது
மேற்குறிப்பிட்ட காரணத்தினால் இவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது அத்துடன் இவருடைய மனைவியாhரும் வலிகாமம் வலயத்திற்குட்பட்ட பிரபல்ய பாடசாலையின் ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.