மன்னார் மாவட்டம், சாந்திபுரம் பகுதியை வசிப்பிடமாக கொண்ட இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் படகு மூலம் தமிழகம் சென்றுள்ளனர்.
அவர்கள், நேற்று (டிசம்பர் 1) தனுஷ்கோடிக்கு அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டில் சென்று இறங்கியுள்ளனர்.
விசாரணையின்போது அவர்கள், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகவே தாம் படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்ததாகவும் படகு கட்டணமாக இரண்டு குடும்பங்களும் சேர்ந்து ஒரு இலட்சம் ரூபாய் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இன்று வரை 295 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.