மனைவியின் தாக்குதலில் கணவர் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

நுவரெலியாவில் மனைவியின் தாக்குதலில் கணவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா விஜிதபுர பிரதேசத்தில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவருக்குமிடையில் நேற்றிரவு(செப்ரெம்பர் 23) ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சந்தேகத்திற்கிடமான பெண் தனது கணவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பொலிஸ் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு நேற்று இரவு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் விஜிதபுர பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. வீட்டில் குடிபோதையில் இருந்த கணவர், மனைவி வேலையை முடித்துவிட்டு இரவு வீட்டுக்கு வந்த பிறகு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்த கணவர் தனது மனைவியைத் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் கணவனை மனைவி கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

Share this Article