மத்திய சுற்றாடல் அதிகார சபை தலைவரின் பதவி இடைநிறுத்தம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ்.பத்திரகே பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவரின் பதவி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

சுற்றாடல் அனுமதி வழங்குவதற்காக வர்த்தகர் ஒருவரிடம் இருந்து ஒரு கோடி ரூபா லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் உட்பட மூவர் கடந்த வெள்ளிக்கிழமை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்றுமுன்தினம் (நவம்பர் 11) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Share this Article