மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை தனியார் துறைநிறுவனத்திடம் ஒப்படைக்கும் யோசனைக்கு இலங்கை அமைச்சரவைவெள்ளிக்கிழமை பச்சைக்கொடி காட்டியுள்ளது. ஏற்கனவே விருப்பங்கள்சமர்ப்பித்த பல்வேறு நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டுநிறுவனங்களிடம் 30 வருடங்கள் நீண்ட கால குத்தகை அடிப்படையில்விமானநிலைய நிர்வாகம் வழங்கப்பட உள்ளது.
இந்தியாவின் Shaurya Aeronautics Pvt. Ltd மற்றும் ரஷ்யாவின் Airport of Regions Management ஆகிய நிறுவனங்களே விமான நிலையத்தைபொறுப்பேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.