தீவகத்தில் 1991ல் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டைதீவுப் பகுதியில் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டு, அவர்களின் சடலங்கள்அங்குள்ள தேவாலயக் காணியின் கிணறு உட்பட மூன்று கிணறுகளில் போட்டுமூடப்பட்டன என்று கூறப்படுவது தொடர்பில் விசாரித்து, அந்தக் கிணறுகளைச்சட்டரீதியாக அகழ்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
அந்த வழக்கு நேற்றையதினம் (செப். 17) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில்எடுத்துக் கொள்ளப்பட்டது.
யாழ். குடாநாட்டின் தீவகப் பகுதியைப் படையினர் கைப்பற்றியபோதுபடையினரும் துணை குழுவும் இணைந்து பலரைக் கைது செய்து, சுட்டுக்கொன்று, மண்டைதீவின் தேவாலயக் கிணறு
உட்பட 3 இடங்களில் உள்ள கிணறுகளில் போட்டு மூடினர் எனக் கண் கண்டசாட்சிகளின் அடிப்படையில் சில மத குருமாரும் இணைந்து இந்த வழக்கைத்தாக்கல் செய்துள்ளனர் எனத் தெரிகின்றது.
அடையாளம் காணப்பட்ட கிணறுகளை அகழ உத்தரவிடக்கோரியே இவ் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில்எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது ஊர்காவற்துறை பொலிசாரிடம் அகழ்வு பணியைமேற்கொள்வதற்கான வசதிகள் தம்மிடம் இல்லை என சுட்டிக்காட்டியதை அடுத்துயாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரிடம் குறித்த வழக்குபாரப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் குறித்த மண்டைதீவு புதைகுழி விவகாரம் தொடர்பாகஅறிக்கையை சமர்ப்பிக்குமாறு யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு ஊர்காவற்துறை நீதவான் உத்தரவிட்டார்.
இந்நிலையில் குறித்த வழக்கு தொடர்பாக பொலிஸார் கால அவகாசம்கோரியதால் எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது