மண்டைதீவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (ஒக். 16) நடைபெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவர் அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கண்ணதாசன் பிரேமதாசன் என்பவர் ஆவார்.
பெறப்பட்ட தகவல்களின் படி, இன்று (ஒக். 17) அவர் உந்துருளியில் யாழ்ப்பாணத்திலிருந்து அல்லைப்பிட்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, மண்டைதீவு சந்தி அருகே பின்னால் வந்த பேருந்து அவர் மீது மோதியுள்ளது.
விபத்தில் கடுமையாக காயமடைந்த அவர் மயக்கமுற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.