மண்கும்பான் கிராமசேவையாளர் அலுவலக வருடாந்த கூட்டம் எதிர்வரும் 06 ஆம் திகதி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நண்பர்கள் விளையாட்டுக்கழகத்தினால் எதிர்வரும் 06 ஆம் திகதி ஞாயிறுக்கிழமை காலை 09.00 மணிக்கு மண்கும்பான் கிராமசேவையாளர் (J/11) அலுவலக வளாகத்தில் வருடாந்த கூட்டமானது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது
1.நிர்வாகத் தெரிவு
2. யாப்பு பரிசீலித்தல்
3.அங்கத்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்ளல்
4.கழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் பற்றி
கலந்துரையாடல்
5. மண்கும்பான் நண்பர்கள் வெற்றிக்கிண்ணம் 2023 பற்றி கலந்துரையாடல்
6.கழகத்தின் நிறை குறைகள் பற்றி ஆராய்தல்
7. ஏனைய விடையங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளன.

எனவே கழக உறுப்பினர்கள் மற்றும் கழகத்தில் இணைந்து கொள்ள விரும்புபவர்கள், நலன் விரும்பிகள் அனைவரையும் தவறாது சமூகமளிக்குமாறு மண்கும்பான் நண்பர்கள் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றனர்.

Share this Article