மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக பிராந்திய வான்பரப்பு பகுதியளவில் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது வான்பரப்பு மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து ஐக்கிய அரபு அமீரக விமானச் சேவை தனது செயல்பாடுகளைக் கவனமாக ஆரம்பித்துள்ளது.
எனினும், பாதுகாப்பு நிலவரங்களைக் கருத்திற்கொண்டு மறு அறிவித்தல் வரை மட்டுப்படுத்தப்பட்ட விமானப் பயண அட்டவணையின் கீழேயே சேவைகள் முன்னெடுக்கப்படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
நீண்டகாலமாகத் தங்கியிருக்கும் பயணிகள் மற்றும் மருந்துகள், பொருட்கள் போன்ற அத்தியாவசிய சரக்குகளைக் கொண்டு செல்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது