15.01.2024 புதன்கிழமை மாலை 5.30 மணி வானிலை அவதானிப்பு.
இந்த பதிவு மக்களை குழப்பத்துக்குள்ளாக்கும் பதிவல்ல. ஆனால் மக்கள்எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் பதிவு. நாம்போதுமான தயார்ப்படுத்தலுடன் இருந்தால் ஏற்படக்கூடிய சிறிய பாதிப்பைக்கூடதவிர்க்க முடியும் என்பதனாலேயே இப் பதிவு.
முன்னரே குறிப்பிட்டபடி எதிர்வரும் 17.01.2025 அன்று வங்காள விரிகுடாவில்வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக்குகின்றது.
இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியுடன் மேலைக் குழப்பமும், மேடன் யூலியன்அலைவின் வருகையும் இருப்பதனால் எதிர்வரும் 18.01.2025 முதல் 21.01.2025 வரை மிகக் கனமழை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பலபகுதிகளுக்கும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
1. எதிர்வரும் 18.01.2025 முதல் 21.01.2025 வரை மிகக் கனமழை கிடைக்கும்வாய்ப்புள்ளது.
2. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நிலம் நிரம்பு நிலையைஅடைந்துள்ளது.
3. கிழக்கு மாகாணங்களின் முக்கிய குளங்களான சேனாநாயக்க சமுத்திரம், உன்னிச்சை , கந்தளாய்,வாகனேரி, கடுக்காமுனை, நவகிரி, வீராகொட, றுகம்குளம் போன்றன கிட்டத்தட்ட அவற்றின் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.
4. வடக்கு மாகாணத்தின் பிரதான குளங்களான இரணைமடு, வவுனிக்குளம், முத்தையன் கட்டு, கணுக்கேணி, தண்ணிமுறிப்பு போன்றன தற்போது மேலதிகநீரை வெளியேற்றுகின்றன.
4. இந்த சூழ்நிலையில் எதிர்வரும் 18.01.2025 முதல் 21.01.2025 வரைகிடைக்கும் கன மழை பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தாழ்வான பகுதிகளிலும், குளங்களின்மேலதிக நீர் வெளியேறும் பகுதிகளுக்கு அண்மையில் உள்ள மக்களும்இந்நாட்களில் மிக அவதானமாக இருப்பது அவசியம்.
6. முன்னரே குறிப்பிட்டபடி நாளையும் நாளை மறுதினமும் (16/17) மழை சற்றுகுறைவாக இருக்கும்
7. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் விவசாயிகள் இதனைக் கருத்தில்கொண்டு தமது அறுவடைச் செயற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது.