மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சும் யாழ்ப்பாணம் மாவட்டச்செயலகமும் இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தினம் யாழ்ப்பாண மாவட்டஅரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம்(மார்ச் 09) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள்அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் அவர்களும், கடற்றொழி்ல் நீரியல் மற்றும்கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணாநாதன் இளங்குமரன்,வைத்திய கலாநிதி சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, பனை அபிவிருத்திசபைத் தலைவர் வி. சகாதேவன் ஆகியோரும் , சிறப்பு விருந்தினராக வடக்குமாகாண மகளிர் விவகாரம் புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள் அமைச்சின்செயலாளர் பொ. வாகீசன் கெளரவ விருந்தினர்களாக யாழ் சமூக செயற்பாட்டுமையத்தின் இணைப்பாளர் ந. சுகிர்தராஜ், பாலம் செயற்றிட்ட திட்டஇணைப்பாளர் எஸ். கிரிகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் மாவட்ட மற்றும் பிரதேச செயலக ரீதியாக தெரிவு செய்யப்பட்டபெண் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வுடன் சிறப்புரைகள், நடனம் மற்றும் நாடகம் என்பன நடைபெற்றது.