போதை வியாபாரத்தை கட்டுப்படுத்த டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read
daklash

யாழ்ப்பாண மாவட்டத்தை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்துள்ள போதைப் பாவனை உட்பட்ட சட்ட விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பொலிஸாருக்கு ஆளணிப் பற்றாக்குறை காணப்படுமாயின் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்பைப் பெற்று இந்த நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைக்குழுவின் முன்னாய்த்தக் கூட்டத்தின் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Share this Article