“போதையற்ற எங்கள் இளைஞர்கள்” என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வினை ஏற்படுத்தக்கூடிய வகையிலான ஆக்கங்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கோரப்பட்டுள்ளன.
தற்காலத்திற்கு பொருந்தும் வகையில் புத்தாக்கமான ( Creative) கருத்தை வெளிப்படுத்தக்கூடிய ஆக்கங்ளை சமர்ப்பித்தல் வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நிபந்தனைகள்
1. வயது 15 -29 ஆக இருத்தல் வேண்டும்.
2.தொனிப்பொருளுக்கு ஏற்றவகையிலான புகைப்படம் மற்றும் கவிதை
3. Video ஆக்கத்திற்கான காலம் ஆகக்கூடியது 30 விநாடிகள்
4. விழிப்புணர்வை ஏற்படுத்த கூடிய விளம்பரங்கள்
5. சித்திரம் கணணியில் வரையப்பட்ட ஆக்கங்களும் ஏற்றுக் கொள்ளப்படும்.
இப்போட்டியில் மாவட்ட மட்டத்தில் 1ம்,2ம்,3ம் இடங்களை பெறுபவர்களுக்கு பணப்பரிசிலும் முதல் 5 இடங்களை பெறுபவர்களுக்கு தேசிய போட்டியில் பங்குபற்றுவதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்படும்.