போதைமாத்திரைகளை விற்பனை செய்த மருந்தக ஊழியர் உட்பட இருவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் மருந்தகம் ஒன்றின் ஊழியர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த மருந்தகத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதும் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர மத்தியில் வியாபார நோக்கத்துடன் ஆயிரத்து 100 போதை மாத்திரைகளுடன் நடமாடிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் பிரபல மருந்தகத்தின் ஊழியர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

அதனடிப்படையில் மருந்தகத்தில் முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் மேலும் இரண்டு பெட்டிகளில் சுமார் 250 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.

குறித்த மாத்திரைகள் வலி நிவாரணியாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் இருவரும் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

Share this Article