போதைப் பொருளுக்காக வீடுடைத்து திருட்டு!- விசாரணையில் வெளிவந்த தகவல்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

இருபாலை, கட்டப்பிராயில் நடந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் ஆள்களற்ற நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த 16 பவுண் நகைகளைக் திருடித் தப்பிச் சென்றிருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் சந்தேகநபர்கள் இருவரைக் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து நகையையும் மீட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நாயன்மார்கட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் 24 வயதுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்கள் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என்றும், போதைப்பொருள் கொள்வனவுக்காகவே திருட்டுக்களில் ஈடுபடுகின்றனர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Share this Article