நாடளாவிய ரீதியில் 269 பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அவ்வமைச்சின் செயலரின் தேவைக்கு அமைய வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களத்துக்குள் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கடந்த 23 ஆம் திகதி வெள்ளிக்கிழைமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இந்த இடமாற்றமானது வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் மா அதிபரின் எதிர்ப்பையும் மீறி, அதனை கவனத்தில் கொள்ளாது இந்த இடமாற்றம் வழகப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தலை இலக்குவைத்து இந்த இடமாற்றம் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களத்துக்குள் பரவலாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் மா அதிபரின் கையெழுத்து மற்றும் நேரடி உத்தரவு எதுவும் இன்றி, பொலிஸ் திணைக்களத்தின் மனித வள முகாமைத்துவ பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.என். சிசிர குமாரவின் கையெழுத்துடன், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலரின் உத்தரவுக்கு அமைய இந்த இடமாற்றம் வழகப்பட்டுள்ளது.