பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார் சிவலிங்கராஜா ரகுராமன்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மகப்பேற்றியல் மற்றும் பெண்நோயியல் துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் வைத்தியநிபுணர் சி.ரகுராமன் பேராசிரியராகப் பதவியுயர்வு பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் பழைய மாணவராகிய இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மருத்துவமானி மற்றும் சத்திரசிகிச்சை மானிப் பட்டத்தைப் பெற்று அதன் பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்தின மருத்துவப் பட்டப்பின் கற்கைகளுக்கான நிறுவனத்தில் மருத்துவக் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றவர்.

இங்கிலாந்தில் வெளிநாட்டுப் பயிற்சியை நிறைவுசெய்ததன் மூலம் தகமைபெற்ற மகப்பேற்றியல் வைத்திய நிபுணராக அங்கீகரிக்கப்பட்ட இவர் கற்பித்தலில் நாட்டம் கொண்டு மருத்துவபீடத்தில் சிரேஸ்ட விரிவுரையாளராக இணைந்து கொண்டார்.

பேராசிரியர் ரகுராமன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் சிலலிங்கராஜா அவர்களது புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல்வேறு சமூகப் பணிகளில் தன்னை இணைத்துள்ள இவர் சிவபூமி அறக்கட்டளையின் அனுசரணையில் கருவளச் சிகிச்சை மையம் ஒன்றை நிர்வகித்துவ வருவது அவரது சமூகப் பங்களிப்புக்கு காத்திரமான அடையாளமாகும்

Share this Article