வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்ட 8 மாதக் குழந்தை பெற்றோரின் மூட நம்பிக்கையால் உயிரிழந்த சோகச் சம்பவம் யாழ்ப்பாணம், நாவாந்துறையில் நடந்துள்ளது.
இந்த 8 மாதக் குழந்தை கடந்த வியாழக்கிழமை வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்டது. குழந்தையை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்காத பெற்றோர், அருகில் உள்ள ஆலயத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
குழந்தையின் வயிற்றோட்டம் நிற்பதற்காக அங்கு விசேட பூசை செய்து, குழுந்தைக்கு நூல் கட்டிய பெற்றோர் மீண்டும் குழந்தையை வீட்டுக்குக் கொண்டு வந்துள்ளனர்.
ஆனால் குழந்தையின் வயிற்றோட்டம் நிற்கவில்லை. அதையடுத்து பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அப்போது குழுந்தை ஆபத்தான நிலையை அடைந்திருந்தது.
அதிக நீரிழப்புக் காரணமாக ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளது.
வயிற்றோட்டம் காரணமாக ஏற்பட்ட அதிகளவு நீரிழப்பே குழந்தையின் உயிரிழப்புக்குக் காரணம் என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.