பெரும்போர் பிறீமியர் தொடரில் P.V Foxes அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

பெரியவிளானின் பெரும்போர் பிறீமியர் போட்டிகளின் இறுதிப் போட்டிக்குள் பலம் வாய்ந்த P.V Foxes மற்றும் P.V Kings அணிகள் நுழைந்தன.

லீக் சுற்றில் P.V Foxes அணியினர் எதிர்கொண்ட 6 ஆட்டத்தில் 4 வெற்றியையும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தும் ஒரு போட்டியை சமன் செய்தும் 14 கோல்களை அடித்து 27 புள்ளிகளுடன் அதிக புள்ளிகளை பெற்று, தங்களது அணியின் பெயருக்கு ஏற்றது போல கலவரமின்றி தந்திரமாக இறுதிப் போட்டிக்கு முதலாவது அணியாக தெரிவானது.

இரண்டாவதாக தெரிவான P.V Kings அணியினர் சந்தித்த 6 போட்டிகளில் 2 போட்டிகளை வெற்றி கொண்டும் 3 போட்டிகளில் சமநிலையுடனும் 1 போட்டியில் தோல்வியடைந்து, 22 புள்ளிகளை பெற்றுக்கொண்டனர்.

பலம் வாய்ந்த இரு அணிகளும் எமது கழகத்தின் பாதுகாவலர் பாதுவை புனித அந்தோனியாரின் திருநாளான நாளை (ஜூன் 13) செவ்வாய்க் கிழமை மாலை 4.30 மணிக்கு எமது கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.

 

Share this Article