பெண் குடும்பநல சுகாதார சேவை துறையில் தற்போது 3,000க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் உள்ளதாக அதன் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்தார்.
இதன் காரணமாக, நாடு முழுவதும் பெண் குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார சேவை சங்கம் தெரிவித்தது.
தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற குடும்பநல உத்தியோகத்தர்கள் உள்ளதாகவும் சுகாதார சேவை சங்க தலைவர் கூறினார்.
குடும்பநல உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை காரணமாக, தற்போது பணியில் உள்ள அதிகாரிகள் பல சுகாதார பிரிவுகளில் பதிலீட்டு பணிகளை செய்து வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் குடும்பநல அதிகாரிகள் முக்கிய பங்காற்றுகின்றனர். அவர்கள் செய்யும் பணிகள் மற்ற அதிகாரிகளின் கடமைகளுக்கு ஒப்பானவையாக இல்லை.
ஆகையால், தற்போதைய குடும்பநல உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.