அச்சுவேலி வளலாய் அமெரிக்கன் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 36 வறிய நிலை மாணவர்களுக்கு பூமணி அம்மா அறக்கட்டளையால் இன்று(செப்ரெம்பர் 20) பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டன.
அச்சுவேலி வளலாய் பகுதியை பல ஆண்டுகளாக இலங்கை இராணுவம் அதி விஷேட பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தி, தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
போரின் பின்பு அவ்வூர் மக்கள் மீண்டும் மீள் குடியேறி, பாடசாலையும் புனரமைக்கப்பட்டு, திறக்கப்பட்ட நிலையில், மக்களின் வீடுகள் அழிக்கப்பட்டு, பொருளாதாரமும், சுயதொழில் உட்பட அனைத்தும் பாதிப்புற்ற நிலையில், பாடசாலையின் மாணவர்களும் பெரும் கஷ்டத்தை எதிர்நோக்கி வந்த சூழலில்,பாடசாலை சமூகம் அறக்கட்டளையினரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக பாதணிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.