வடக்கு மாகாணத்தில் இம்முறை 18 ஆயிரத்து 759 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுகின்றனர் என்று வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கென பிராந்திய ரீதியில் 6 நிலையங்கள் பரீட்சைத் தாள்களைச் சேகரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 71 பரீட்சை இணைப்பு நிலையங்களும் 209 பரீட்சை நிலையங்களும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.