தற்போது ஏற்பட்ட புரெவி புயல்காற்றின் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கடும் காற்றும் தொடர்ச்சியான மழையும் நெடுந்தீவில் காணப்படுகின்றது அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் இரவு கடும் காற்றும் மழையும் காணப்பட்டதுடன் தொடர்ச்சியாக இன்னும் மழைகாணபபடுகின்றது.
மழை காரணமாக கடற்தொந்தளிப்பு காற்றின் காரணமாக கரையை நோக்கி கடல் நீர்; உட்புகுந்துள்ளதுடன் வீடுகள் வீதிகள் பல வெள்ளத்தில் காணப்படுகின்றது இதனால் குறிப்பிட்ட சில குடும்பங்கள் இடம் பெயர்;ந்து உறவினர் வீடுகளில் தங்கியுள்ளார்கள் நலன்புரி நிலையங்களாக பாடசாலைகள் தயார்படுத்தப்பட்ட போதும் ஒருவரும் நலன் புரி நிலையங்களுக்க வருகைதரவில்லை. ஆயினும் நெடுந்தீவின் அனைத்துப் பகுதிகளும் வெள்ளத்தில் காணப்படுகின்றது.
கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்தொழில் படகுகள் சில சேதமாக்கப்பட்டுள்ளதுடன் கடற்தொழில் உபகரணங்களும் சேதமடைந்துள்ளன. தொழிலாளர்கள் அவற்றினை பாதுகாக்கும் நடவடிக்மைகயில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றார்கள்
காற்றின் காரணமாக மரங்கள் முறிந்து விழுந்ததுடன் சிறு தேசங்களும் இதன் காரணமாகவும் மழை வெள்ளம் காரணமாகவும், மக்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலமை காணப்படுகின்றது வெள்ளம் காரணமாக கால்நடைகள் பாதுகாப்பாக தங்க முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது,
இரவு 12.30 மணி முதல் மழை நீர் மின்சார சபைக்குள் நீர் உட்புகுந்ததால் மின்சார சேவை முற்றாக தடைப்பட்டுள்ளது இதனால் மக்களது சில தேவைகள் தடைப்பட்டுள்ளதுடன் தெலைபேசிகள் தொடர்புகளும் பல துண்டிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் நெடுந்தீவு இறங்கு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குமுதினிப்படகு மழைகாரணமாக தண்ணீர் உட்புகுந்துள்ளது ஆயினும் அதிகாலை வேளையில் நீர்ப்பம்பி கொண்டு நீர்; இறைக்கப்பட்டு வெளியில் எடுக்கப்பட்டுள்ளது இயந்திரம் மற்றும் மோட்டர் பகுதிகளுக்குள் நீர் சென்றிக்க வாய்புள்ளதாகவும் அதனால் அதனை திருத்தம் செய்தே காலநிலை மாற்றத்தின் பின்னர் சேவையில் ஈடுபடுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இறங்கு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அக்குவாட்டிப் படகு முற்றாக கடலில் முழ்கியுள்ளதுடன் பல நோக்கு கூட்டுறச்சங்கத்தின் உதயதாரகை படகும் சேதமடைந்துள்ளது.
நெடுந்தீவில் நிஷா சூறாவளியின் பின்னர் ஏற்பட்ட பெரும் வெள்ள நிலமையாக இது காணப்படுவதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளதுடன் பாதுகாப்பான செயற்பாடுகளில் மக்கள் இணைந்து செயற்பட்டு வருகின்றனர் மழை தொடர்ச்சியாக பெய்து வருவதுடன் காற்றின் பலம் அதிகரித்து வருவதையும் உணரமுடிகின்றது.