புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வாழ்வாதார உதவி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாண மாவட்டத்தில் மண்டோஸ்(Mandous) புயலினால் மிகவும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கல் நிகழ்வு யாழ் மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் நேற்றுமுன்தினம்(ஒக்ரோபர் 19) பிற்பகல் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மன்னாா் மெசிடோ நிறுவனத்தினால் ஊர்காவற்துறை, நெடுந்தீவு , வேலணை, தெல்லிப்பழை , பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலகங்களைச் சேர்ந்த 52 பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 45000 ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மாவட்ட செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், (மன்னாா்)மெசிடோ நிறுவன பணிப்பாளர் , ஒருங்கிணைப்பாளர், கள ஒருங்கிணைப்பாளர், உத்தியோகத்தர்கள் உட்பட பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Share this Article