2026 ஆம் ஆண்டுமுதல் நடைமுறைக்கு வரும் புதிய கல்விச் சீர்திருத்தத்தின்கீழ் பாடத்திட்ட வழிகாட்டல் பொறிமுறைகள் தொடர்பாக, ஆசிரியர்களுக்கான செயலமர்வின் ஒரு பகுதியாக கள ஆய்வு நிகழ்வு இன்று (அக்டோபர் 18) தீவக கல்வி வலயத்தினால் முன்னெடுக்கப்பட்டது.
உலகளாவிய முன்னேற்றத்திற்கேற்ப நவீன கல்வி முறைகளை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு கல்விக் கொள்கையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டு முதல் தரம் ஒன்று மற்றும் தரம் ஆறு வகுப்புகளுக்காக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் இச்செயலமர்வு நடத்தப்பட்டது.
தீவக கல்வி வலயத்தின்கீழ் விஞ்ஞானம் மற்றும் கணிதப் பாட ஆசிரியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இக்கள ஆய்வின்போது, நில அமைப்பு, சூழலின் அக மற்றும் புறச் சிறப்பம்சங்கள், தாவர இனப் பரம்பல், நீர்நிலைகள் தொடர்பான அவதானிப்புகள் உள்ளிட்ட விடயங்கள் நடைமுறை ரீதியாகப் பயிற்சியளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.