முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள கிராமஅலுவலர்களுக்கான திசைமுகப்படுத்தல் பயிற்சிகள் இன்று (ஜூன்10) மாவட்டசெயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டப்பத்தில் காலை 9.15 மணிக்குதகவல் தொடர்பாடல் தொழிநுட்ப உத்தியோகத்தர் யோ.மதுசூதனன்தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன்பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் கிராம அலுவலர்களுக்கு தொழில்சார்அறிவுரைகள், ஆலோசனைகளை வழங்கினார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் 6 பிரதேச செயலகங்களுக்கும் புதிதாகநியமிக்கப்பட்டுள்ள 25 கிராம அலுவலர்களுக்கான 90 மணித்தியாலங்களைக்கொண்ட பயிற்சியானது இன்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்கு 06 பேரும், துணுக்காய்பிரதேச செயலகத்துக்கு 07 பேரும், மாந்தை கிழக்கு பிரதேச செயலத்துக்குஒருவரும், புதக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு 2 பேரும், ஒட்டுசுட்டான்பிரதேச செயலகத்துக்கு 9 பேரும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.